ஒசூர் உள்ளட்ட இடங்களில் டிவிஎஸ் தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்து டிவிஎஸ் நிறுவனம் ஓசூர் உட்பட மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் தொழிற்சாலைகள் இயங்குவது உட்பட பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்து டிவிஎஸ் நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஓசூர், மைசூர், நளகர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலைகளில் இன்று முதல் உற்பத்தி தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் சமூகவிலகல் உட்பட தொழிற்சாலைகளுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து வருவதாகவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

34 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்