கரோனா பாதிப்பு; ஆட்டோமொபைல் துறையினருடன் பிரகாஷ் ஜவடேகர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறை மீது கொவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் சாத்தியமுள்ள பாதிப்பு குறித்து புரிந்து கொள்வதற்கும், தாக்கத்தை குறைக்கத் தேவைப்படும் கொள்கை பற்றி துறையின் ஆலோசனைகளைக் கேட்பதற்கும், இந்திய ஆட்டோமொபைல் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயல் அலுவலர்களின் குழுவுடன், மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆலோசனை நடத்தினார்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துறைக்குப் புத்துயிர் அளிப்பது பற்றியும், வாழ்வாதாரம் மற்றும் வளங்களை அணிதிரட்டுதல் குறித்தும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. கோரிக்கைகள் மட்டுமே வைக்கப்படாமல், வலுவான ஆலோசனைகளும் விவாதத்தின் போது வந்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மீண்டும் பணியில் இணைவதற்கு முன் அவர்களை அணிகளாகப் பரிசோதித்தல், ஆன்லைன் பதிவுகள், விற்பனை மையங்களில் கிருமி ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், இரு பணியாளர்களுக்கு இடையே தடுப்பான்கள் அமைத்தல் போன்ற நல்ல ஆலோசனைகள் கூட்டத்தின் போது வழங்கப்பட்டதாக திரு. ஜவடேகர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் தொழில் சங்கிலியை மறுபடியும் திறப்பது; விற்பனையாளர் மையங்களுக்கு ஆதரவு; வேலைவாய்ப்பு ஆதரவு இடையீடுகள்; தேவையை அதிகரிக்க செய்வது மற்றும் நிதி ஆதரவுக்கான தேவை தொடர்பான ஆலோசனைகளுடன் முக்கிய விஷயங்களை தொழில்துறை எடுத்துரைத்தது.

போக்குவரத்து அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் இதர தொடர்புடைய அமைச்சகங்களுடன் அனைத்து ஆலோசனைகளும் கோரிக்கைகளையும் நாங்கள் விவாதிப்போம் என்று தொழில்துறை தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

கொவிட்-19ஐ கையாளுவதில் பிரதமரின் தலைமையை தொழிலதிபர்கள் பாராட்டினார்கள். "கொவிட்-ஐ இந்தியா மிகவும் சிறப்பாகக் கையாண்டதால், விலைமதிப்பில்லா உயிர்களை நாம் காப்பாற்றி உள்ளோம். வாழ்வாதரத்தின் மீது கவனம் நாம் தற்போதுசெலுத்த வேண்டும்," என்று கனரகத் தொழில்கள் அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்