வட்டி விகிதம் நிர்ணயம் செய்யும் குழுவில் ரிசர்வ் வங்கிக்கு முக்கியத்துவம் தேவை

By செய்திப்பிரிவு

வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தைகூட அரசாங்கம் நீக்கி விடலாம், ஆனால் அந்த குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் அதிக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் இந்த குழு எப்படி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட முடிவு செய்த பிறகு ரங்கராஜன் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

இந்த குழு அமைப்பது தொடர்பாக நிதி அமைச்சகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது. இந்த குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் மூன்று பேரும், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் மூன்று பேரும் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. இதில் சரிசமமான கருத்துகள் இருக்கும்பட்சத்தில் ரிசர்வ் வங்கியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னரை மத்திய அரசு நியமிக்கிறது. வட்டி விகிதங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை குறித்த அறிவிப்பு கூட்டத்தில் குழுவாக சேர்ந்து வட்டி விகிதத்தை முடிவு செய்வது நல்லது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்