கோதுமை இறக்குமதிக்கு கூடுதல் சுங்க வரி

By ஐஏஎன்எஸ்

கோதுமை இறக்குமதியைத் தடுக்க 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

உள்நாட்டில் கோதுமை விலை சரிவைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த வரி விதிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதால் அரசுக்கு ரூ. 90 கோடி அளவுக்கு வரி வருவாய் கிடைக்கும் என்று மக்களவையில் நேற்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் தனியார் நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து 5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. உள்நாட்டில் போதுமான அளவு கோதுமை கையிருப்பு உள்ள நிலையில் இவ்விதம் இறக்குமதி செய்வதால் விலை சரிவு ஏற்படும் என்பதால் சுங்க வரி விதிக்கப்படுவதாக ஜேட்லி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்