கரோனா; தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் ஐடி நிறுவனங்ளுக்கு 4 மாதங்கள் வாடகை தள்ளுபடி: மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகை செலுத்துவதில் இருந்து தள்ளுபடி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா சவால்களையும், அதைத் தொடர்ந்த ஊரடங்கையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகை செலுத்துவதில் இருந்து தள்ளுபடி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

01.03.2020 முதல் 30.06.2020 வரை, அதாவது தற்போது வரை நான்கு மாதக் காலத்துக்கு, நாட்டில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா வளாகங்களில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு, வாடகை தள்ளுபடி அளிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவுக்கு நாடெங்கிலும் 60 மையங்கள் உள்ளன. கரோனா காரணமாக உருவாகியுள்ள சிக்கலான சூழ்நிலையில், இந்த மையங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வாடகை தள்ளுபடி அளிக்கும் நடவடிக்கை தொழிலுக்கு நிவாரணம் அளிக்கும்.

60 இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா மையங்களில் இருந்து செயல்படும் 200 தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும். 01.03.2020 முதல் 30.06.2020 வரையிலான‌ நான்கு மாதக் காலத்துக்கு இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வாடகை தள்ளுபடியின் மதிப்பு தோராயமாக ரூ. 5 கோடி ஆகும். இந்த நிறுவனங்களில் நேரடி ஆதரவில் இருக்கும் சுமார் 3,000 தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை ஊழியர்களின் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

33 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்