சர்வதேச கரன்சி மாற்றங்களை கண்காணிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு நாஸ்காம் வலியுறுத்தல்

By பிடிஐ

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பிற நாடுகளின் கரன்சிகளின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைப்பான நாஸ்காம் வலியுறுத்தியுள்ளது.

ரூபாயின் மாற்று மதிப்பு பெருமளவு வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை உருவாகும் போது அரசு தலை யிட்டு அதைத் தடுக்க வேண்டும் என்று நாஸ்காம் தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள் ளார்.

ரூபாயின் மாற்று மதிப்பு வீழ்ச்சி யடைவது எந்த ஒரு துறைக்கும் சரியானதாக இருக்காது. இவ்வித வீழ்ச்சியானது நாட்டுக்கும் நல்ல தல்ல. இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் கரன்சியும் மாற்று மதிப்பில் வீழ்ச்சியைச் சந்திக்கும்போது அந்நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

சீனாவின் கரன்சியான யுவானின் மதிப்பு சரிந்ததால் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதார தேக்க நிலையைப் போக்க தங்கள் நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பை கடந்த சில வாரங்களில் 4 சதவீதம் வரை சீன அரசு குறைத்துள்ளது.

டாலரின் மதிப்பு ஸ்திரமடையும் போது அது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால் அது நிலையானதாக இருக்காது. ஆனால் ரூபாயின் வீழ்ச்சியால் நமது அந்நியச் செலாவணி கையிருப்பு கரையும் அளவுக்கு இருப்பதை தகவல் தொழில்நுட்பத் துறை விரும்பவில்லை என்றார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியும்போது அதன் மூலம் ஆதாயமடைய தகவல் தொழில்நுட்பத் துறை விரும்பவில்லை. தொழிலை சிறப்பாக செய்து அதன் மூலம் லாபமீட்டவே விரும்புவதாக அவர் கூறினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்