நாடு முழுவதும் 296 நகரங்களில் ஏர்டெல் 4ஜி சேவை தொடக்கம்

By பிடிஐ

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 4ஜி சேவையை நேற்று தொடங்கி யுள்ளது. நாடு முழுவதும் 296 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் முதன் முதலில் 2012ஆம் ஆண்டு கொல்கத்தாவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது.

வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அனுபவம் இந்த அறிமுகத்துக்கு உதவியது என 4ஜி சேவையை தொடங்கிவைத்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக் குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்தார். நாடு முழுவதும் முதல் முறையாக வணிக ரீதியான 4ஜி சேவையை வழங்கியுள்ளோம். இதன் மூலம் அதி விரைவான வயர்லஸ் பிராட் பேண்ட் சேவை கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு அதிவிரைவான இணைய சேவை அனுபவம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

4ஜி சேவை மூலம் துல்லியமான வீடியோ சேவை கிடைக்கும். மேலும் அதிவிரைவான பதிவேற் றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த சேவையை ஸ்மார்ட்போன், டாங்கிள்கள் மற்றும் 4ஜி சேவை கிடைக்கும் இடங்கள் வொய்-பை டாங்கிள்கள் மூலம் பெறலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ஜி சேவையுடன், 1,000 சினிமா மற்றும் வீடியோ சேவை கிடைக்கும் விங் மூவீஸ் என்கிற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் 4ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் 3ஜி சிம் கார்டிலிருந்து 4 ஜி சிம்கார்டு சேவைக்கு மாற வேண்டும். 3ஜி சேவை கட்டணத்திலிலேயே 4ஜி சேவையை சலுகைக் கட்டணத்தில் வழங்க உள்ளதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்