‘மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு இல்லை’

By பிடிஐ

வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் குழுவினால் (எம்பிசி) மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக் கும் எந்தவிதமான கருத்துவேறு பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது.

முந்தைய வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் எப்படி வாடிக் கையாளர்களுக்கு கொடுப்பார் கள் என்பதில்தான் எங்களின் கவனம் இருக்கிறது. சில காலத் துக்கு முன்பு இந்த கமிட்டி அமைக்க பரிந்துரை செய்ததே ரிசர்வ் வங்கிதான். பல நாடுகளில் ஒரு குழுவாக சேர்ந்துதான் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறார்கள்.

குழுவின் அமைப்பு குறித்து ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் ஏற்கெனவே பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. தொடர்ந்து இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வட்டி குறைப்பு பற்றி கூறும்போது, வட்டி குறைப்பு இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை, ஆனால் அடுத்த முறை வட்டி குறைப்பு அறிவிக்கும்போது ஏற் கெனவே நடந்த வட்டி குறைப்பின் பலன்கள் வாடிகையாளர்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என் பதை பார்த்த பிறகு முடிவு செய்வோம். பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக முக்கிய நடவடிக்கைகள் எடுத் திருக்கிறோம்.

பிளாஸ்டிக் கரன்ஸி குறித்து கேட்டதற்கு, அரசாங்கத்தின் சில துறைகள் இதுகுறித்து பரிசீலனை செய்துவருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

20 secs ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

33 mins ago

இந்தியா

29 mins ago

க்ரைம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

உலகம்

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்