தங்கம் விலை கடும் சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் நிலவி வரும் நிலையில் இன்று கணிசமாக குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.137 குறைந்து ரூ4020 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1096 குறைந்து, ரூ.32160-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் 33824 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 45.90 ஆக விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்