பான் - ஆதார் இணைக்காதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

By செய்திப்பிரிவு

பான் கார்டுடன் ஆதார் கார்டை இம்மாதம் 31-ம்தேதிக்குள் இணைக்காதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரித் துறை இந்த அபராதத்தை விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்காவிடில் அது செயலற்ற கார்டாகிவிடும் என அறிவித்துள்ளது.

இவ்விதம் அது செயலற்றதாகி விடுமாயின் வருமானவரித் துறை சட்டம் 272 பி பிரிவின்கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை உண்டு.

வரி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு பான் அட்டை பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்க, டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க உள்ளிட்ட பல விஷயங்களுக்கு பான் அட்டை அவசியமாகிறது. இந்நிலையில் பான் அட்டை செயலற்றதாகிவிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினம். அதேபோல வங்கியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கு மேலான தொகையைச் செயல்படுத்த பான் அட்டை அவசியம். பணப் பரிவர்த்தனைக்கு பான் அட்டை கட்டாயமாகும். இதை வருமான வரி சட்டப் பிரிவு 139ஏ பிரிவு 278பி(1) உறுதி செய்கிறது. இதன்படி செயலற்ற பான் அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அபராதம் விதிக்க சட்ட விதி வழிவகை செய்கிறது. ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதன் மூலம் பான் கார்டு செயலற்றதாவதை தவிர்க்க முடியும். இவ்விதம் இணைக்கப்படுவதன் மூலம் அது தொடர்ந்து பயன்படுத்த தகுதியானதாக விளங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்