சரக்கு ரயில் போக்குவரத்து: கால அட்டவணை தயாரிக்க ரயில்வே திட்டம்

By செய்திப்பிரிவு

சரக்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவர, அதற்கான கால அட்டவணையை வெளியிட இந்திய ரயில்வே திட்டமிட் டிருக்கிறது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து குறித்த நேரத்துக்குள் நிகழும். அதிக சரக்குகளை கையாள முடியும் என்று ரயில்வே கருதுகிறது.

தற்போது பயணிகள் ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. முக்கியமான கால நேரங் களில் சரக்கு ரயிலை நிறுத்தி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக சரக்குகள் நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

அதனால் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக தனியாக பாதை அமைக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. இப்போது நாட்டின் மேற்கு பகுதியில் (1,504 கிமீ) மற்றும் கிழக்கு பகுதியில் (1,856 கிமீ) பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒரு காலத்தில் இந்திய சரக்கு போக்குவரத்தில் 80 சதவீதம் வரை ரயில்கள் மூலமாகவே நடந்தன. ஆனால் இப்போது 36 சதவீத சரக்குகள் மட்டுமே ரயில்வே மூலம் நடக்கிறது. மீதமுள்ளவை சாலை மூலம் நடக்கின்றன.

இந்த பணிகள் முடிந்த பிறகு சரக்கு ரயிலை இயக்குவதற்கான கால அட்டவணை அமைத்து சரக்கு ரயில்களை இயக்க முடியும். அப்போது சரக்கு போக்குவரத்தானது சாலைகளில் இருந்து ரயில்வேக்கு மாறும் என்று இத்த திட்டத்தின் நிர்வாக இயக்குநரான அதேஷ் சர்மா தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் பீகார் பகுதியில் 56 கிமீ பணிகள் முடிவடையும். மீதமுள்ள பணிகள் பகுதி பகுதியாக நிறைவு பெறும். இந்த திட்டம் முடிவடைந்த பிறகு டெல்லியில் இருந்து மும்பை அல்லது கொல்கத்தாவுக்கு 20 மணிநேரத்தில் சரக்கு ரயில் சென்று சேரும் என்றார்.

தற்போது சரக்கு ரயில்கள் மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. தனி பாதை தயாரான பிறகு அதிகபட்சம் மணிக்கு 100 கிமீ வேகத்தில்கூட இயக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்