உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்- 9-வது இடத்தில் முகேஷ் அம்பானி

By செய்திப்பிரிவு

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் (ரூ.92,300 கோடி) உயர்ந்து, 67 பில்லியன் டாலரை (ரூ.4,75,700 கோடி) எட்டியதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோடீஸ் வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளார்.

ஹூருன் நிறுவனம் 2020-ம்ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் பால்மர் ஆகிய இருவருடன் முகேஷ் அம்பானியும் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியாவிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பெற்று இருப்பவர் முகேஷ் அம்பானி மட்டுமே என்று ஹுருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

140 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் ஃபிஸோஸ் முதல் இடத்தைத் தக்க வைத்துகொண்டுள்ளார். முந்தைய ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்த ஆண்டு 106 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டு மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளார். எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 107 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 102 பில்லியன் டாலர் மதிப்புடன் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் 4-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் 84 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டு 5-இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்