பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை உயருமா? - விற்பனையாளர்கள் கருத்து

By நெல்லை ஜெனா

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதார சிக்கல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தங்க விற்பனையளார்களும் தங்கள் தரப்பு எதிர்பார்ப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாந்தகுமார் கூறியதாவது:

சாந்தகுமார்

நாட்டின் பொருளாதார சூழல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் குடிமக்கள் பெரிதும் உற்று நோக்கும் பட்ஜெட்டாக உள்ளது. இதனால் மக்களிடமும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுவாக வரி செலுத்துபவர்கள் கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக 20 லட்சத்துக்கு அதிகமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு சில சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி வரிச் செலுத்தும் நடைமுறையையும் அரசு எளிமையாக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு தற்போது 12.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் கடத்தல் அதிகமாக நடக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்படும் தங்கம் சந்தைக்குள் வருகிறது. இதனால் கணக்கில் காட்டப்படாத தங்கம் அதிகஅளவில் புழக்கத்தில் உள்ளது. இதனால் அரசுக்கு அதிகமான இழப்பு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கும் பயனில்லை.

எனவே இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன் மூலம் தங்கம் கடத்தி வருவதை தடுப்பதுடன் விலையும் சவரனுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையால் தங்கம் வாங்கும் மக்களுக்கு அதிகமான பயன் கிடைக்கும்.

தங்கத்துக்கு தற்போது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை அப்படியே தொடரலாம். இந்த வரிவிதிப்பின் மூலம் அமைப்பு சாரந்த தொழில்நடைமுறைக்குள் தங்கம் வந்துள்ளது. இதுமட்டுமின்றி உள்ளூரில் மக்கள், அறக்கட்டளை என பல தரப்பினர் வசம் இருப்பாக உள்ள தங்கத்தை சந்தைக்கு திரும்பும் நடவடிக்கை தேவை.

இதுபற்றி நீண்டகாலமாக பேசப்படுகிறது. இதற்காக தங்க டெபாசிட் திட்டத்தை அரசே தொடங்கலாம். இதன் மூலம் தங்கம் இறக்குமதி குறைவதுடன் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்’’ எனக் கூறினார்.

பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு ‘‘உலகளாவிய பொருளாதார சூழல் காரணமாக இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் தங்கமே சிறந்த முதலீடு என்ற எண்ணம் மக்களிடம் நிலவுவதால் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தங்கம் விலை கணிசமாக உயரவே வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

20 mins ago

க்ரைம்

26 mins ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்