உச்ச நீதிமன்ற முடிவு எதிரொலி: வோடஃபோன் ஐடியா பங்கு மதிப்பு 26% வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் வருவாய் பகிர்வுத் தொகை (ஏஜிஆர்) தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தவிர, பரஸ்பர நிதி சார்ந்த முதலீடுகள் கடும் பாதிப்பை சந்திந்துள்ளன.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் வருவாய் பகிர்வுத் தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன. அம்மனுக்களை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், வரும் ஜனவரி 23-க்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. நேற்றைய வர்த்தக முடிவில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25.83 சதவீதம் அளவில் சரிந்து ரூ.4.45-க்கு வர்த்தகமானது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாயில் குறிப்பிட்டத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும். அந்த வகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.53,039 கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். இதுதவிர, இந்நிறுவனத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி அளவில் கடனும் உள்ளது.

இந்நிலையில், பிராங்ளின் டெம்பிள்டன் என்ற பரஸ்பர நிதி நிறுவனம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை நிறுத்திஉள்ளது. இந்நிலையில் அதன்6 நிதிப் பிரிவுகளின் மதிப்புகள் 7 சதவீதம் வரை சரிந்துள்ளன.

பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம் 6 நிதிப் பிரிவுகளில் முதலீட்டாளர்களிடம் நிதி பெற்று வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இந்நிலையில் அந்த நிதிப் பிரிவின்கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் அளவையும் குறைத்துள்ளது. தற்போதைய நிலையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் ரூ.4,500 கோடி அளவிலும், பங்குகளில் ரூ.1,076 கோடி அளவிலும் பரஸ்பர நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்