‘‘அமேசான் பற்றிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: பியூஷ் கோயல் விளக்கம்

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறுகையில் ‘‘இந்தியாவில் 100 கோடி டாலரை முதலீடு செய்வதாக அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் கூறியுள்ளார். ஆண்டுக்கு 100 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்து வரும் எவ்வாறு முதலீடு செய்ய முடியும்.

அதுபோலவே இந்தியாவில் முதலீடு செய்வதால் மின்னணு வர்த்தகத்துக்கு ஆதரவான செயல்பாடுகளை எடுக்க முடியாது. மல்டி பிராண்ட் சில்லரை விற்பனையில் 49 சதவீதத்துக்கு மேல் நேரடி அந்நிய முதலீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை. எந்த நிறுவனமாக இருந்தாலும் அது இந்தியாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் முதலீடு செய்யவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முனைந்து வரும் அமேசான் நிறுவனத்தின் முயற்சியை தடுக்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தனது பேட்டி குறித்து பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கூறி கருத்து மற்ற நிறுவனத்திற்கு எதிராக கூறியதாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்