கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் எல்பிஜி முனையம்: என்ஜிசி எனர்ஜி நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

சென்னை

என்ஜிசி எனர்ஜி நிறுவனம், ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் எல்பிஜி இறக்குமதி மற்றும் சேமிப்பு கிடங்கு முனையம் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.

இந்த சேமிப்பு முனையம் 30 ஆயிரம் டன் அளவில் சேமிக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. ஓமனைச் சேர்ந்த நேஷனல் கேஸ் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெட்ரெடெக் நிறுவனம் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளன.

இந்தியாவில் எல்பிஜி இறக்குமதி முனையத்தை அமைக்க, ஓமனைச் சேர்ந்த நேஷனல் கேஸ் நிறுவனம் என்ஜிசி எனர்ஜி இந்தியா என்ற நிறுவனத்தை 2018-ம் ஆண்டு தொடங்கியது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த பெட்ரெடெக் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டு என்ஜிசி நிறுவனத்தின் 40 சதவீத பங்குகள் பெட்ரெடெக் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

ஆண்டுக்கு 14 லட்சம் டன் எரிவாயுவை கையாளும் தன்மை கொண்டதாக இந்த முனையம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய திட்டத்தினால் 400-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த முனையம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்