காலாண்டு முடிவுகள்

By செய்திப்பிரிவு

பேங்க் ஆப் பரோடா நிகரலாபம் 23% சரிவு

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 23% சரிந்து ரூ.1,052 கோடியாக இருக்கிறது. வாராக்கடன் மற்றும் பணியாளர்களின் சம்பளத்துக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் சரிந்தது.

வங்கியின் மொத்த வருமானம் 4.8 % உயர்ந்து ரூ.12,243 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 4.13% உயர்ந் திருக்கிறது. 1.58% ஆக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 2.07% ஆக உயர்ந்திருக்கிறது.

ஐடிசி நிகர லாபம் 3.61% உயர்வு

எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி-யின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 3.61 சதவீதம் உயர்ந்து ரூ.2,265 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,186 கோடி ரூபாயாக இருந்தது. எப்எம்சிஜி பொருட்களின் தேவை குறைந்ததன் காரணமாக லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதே சமயத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை 7.18 சதவீதம் சரிந்து முடிந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,164 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 8,505 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்