மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான் பொதுத்துறை வங்கிகள் மோசமாகின: நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதவிக் காலத்தில் தான் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையில் இருந்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:

நாடு மிக நெருக்கடியான பொருளாதார சூழலை சந்தித்துக் கொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார். அவர் மிகச்சிறந்த நிபுணர். அவர் மீது எனக்கும் மரியாதை உண்டு.

ஆனால் அவர் பதவி வகித்த காலத்தில் தான் பெரு முதலாளிகளும், அரசியல் தலைவர்களும் தொலைபேசியில் அழைத்து கூறினால் கூட வங்கிகள் கடன் கொடுக்கும் சூழல் இருந்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் இன்றளவும் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தவிக்கின்றன.

அதேபோல் இந்திய பொருளாதாரத்தை மிகச்சிறந்த பார்வையுடன் எடுத்துச் சென்றவர் பிரதமர் மன்மோகன் சிங். இதனை ரகுராம் ராஜனும் ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் பொருளாதார அறிவு நிரம்ப பெற்றவதாக அறியப்பட்ட மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தான்,

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது தான் மிக மோசமான அளவில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பதவி வகித்த நேரத்தில் இந்த பிரச்சினை பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தது.

ஆனால் அவர்களது காலத்துக்கு பிறகு இந்த பிரச்சினை பொதுத்துறை வங்கிகளை பெரிதும் பாதித்துள்ளன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்