2019-ம் ஆண்டில் 9 மாதங்களாக டாடா நேனோ உற்பத்தி இல்லை: ஒரேயொரு கார்தான் விற்றுள்ளது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

2019-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாடா நேனோ கார் உற்பத்தி எதுவும் நடைபெறவில்லை, உள்ளூர் மார்க்கெட்டில் பிப்ரவரியில் ஒரேயொரு கார் மட்டுமே விற்றுள்ளது.

இதனையடுத்து நேனோ கார் மாதிரியைக் கைவிடலாமா என்று பரிசீலித்து வருகிறது டாடா நிறுவனம், ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. நேனோ கார்களின் எதிர்காலம் பற்றி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்றே நிறுவனம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

BS-VI கரியமில வாயு வெளியேற்ற விதிமுறைகளுக்கு இணங்குமாறு தற்போதைய நேனோ கார் உற்பத்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செப்டம்பரில் நேனோ கார் உற்பத்தியும் இல்லை விற்பனையும் இல்லை, பிப்ரவரி மாதத்தில் ஒரேயொரு கார் விற்றுள்ளது.

2008-ல் உலகின் வெகுமலிவான கார் என்ற ஹோதாவில் களமிறங்கிய நேனோ கார் ஆட்டோ எக்ஸ்போ ஒன்றில் அறிமுகமாகி மார்ச் 2009-ல் தொடக்க விலை ரூ1. லட்சம் என்று சந்தையில் அறிமுகமானது. அதன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. சில ஆண்டுகளாக அதன் விற்பனை குறைந்து கொண்டே வந்தது.

ஏப்ரல் 2020 முதல் நேனோ கார் உற்பத்தி, விற்பனை நிறுத்தப்படும் என்று நிறுவன அதிகாரிகள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்