178 ஆண்டு பழமையான சுற்றுலா நிறுவனம் ‘தாமஸ் குக்’ திவால்: 16 நாடுகளில் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் தவிப்பு

By செய்திப்பிரிவு

லண்டன்

சர்வதேச அளவில் மிகவும் பிரபல மான, பழமையான பயண ஏற் பாட்டு நிறுவனமான தாமஸ் குக் திவாலானது. 178 ஆண்டு பழமை யான இந்நிறுவனம் 25 கோடி டாலர் கடன் சுமையால் திவாலாகி யுள்ளது. இதனால் இந்நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள் ளாகி உள்ளனர். இவர்களுக்கு உதவும் பணியில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டுள்ளது.

தற்போது நிறுவனத்தை தொடர்ந்து நடத்த 25 கோடி டாலர் நிதி தேவை. இதை திரட்டுவதற் கான முயற்சியில் முதலீட்டாளர்கள் மத்தியில் சமரச ஒப்பந்தம் ஏற் படாததால் நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நிறுவனத்தின் மீது திவால் நட வடிக்கைகளைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லாத காரணத் தால், நிறுவனம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமஸ் குக் திடீரென மூடப் பட்டதால் சுமார் 1.5 லட்சம் சுற் றுலாப் பயணிகள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை இங் கிலாந்து அரசு மேற்கொண்டுள் ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

உலகம் முழுவதும் 6 லட் சம் பயணிகள் இந்நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண் டுள்ளனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் இங்கிலாந்து பயணிகளாவர். இவர்கள் விடுமுறைக்குப்பிறகு மீண் டும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இங்கி லாந்து அரசு எடுத்து வருவ தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

1841-ம் ஆண்டு உருவாக் கப்பட்ட இந்நிறுவனத்துக்கு 16 நாடுகளில் 21 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இங்கி லாந்தில் மட்டும் 9 ஆயிரம் பணி யாளர்கள் உள்ளனர். இவர்களது வேலை தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. உலகிலேயே மிக வும் பழமையான சுற்றுலா நிறு வனமாக இது திகழ்கிறது. இந் நிறுவனத்துக்கு உள்ள மொத்த கடன் சுமை 210 கோடி டாலராகும்.

இங்கிலாந்து விமான போக்கு வரத்து அமைச்சகம், தாமஸ் குக் மூலம் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பயணிகளை தங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரு வதற்கான பணிகளை மேற்கொள் ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பயணிகளுக்கு உதவுவதற்காக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள் ளது. அதில் அரசு அனுப்பும் விமான சேவை எங்கு கிடைக்கும், விமானம் எப்போது புறப்படும் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பயணிகள் உடனடி யாக விமான நிலையத்துக்குச் சென்று காத்திருக்க வேண்டிய தில்லை. அரசு அனுப்பும் விமானங் கள் விவரத்தை இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டு விமான நிலையங்களுக்குச் செல் லுமாறு வெளிநாடுகளில் சுற் றுலா மேற்கொண்டுள்ள இங்கி லாந்து பயணிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஹோட்டல்கள், ரிசார்ட்களை நடத்து வதோடு விமான சேவையிலும் ஈடுபட்டுள்ளது. ஆண்டுக்கு 1.9 கோடி மக்கள் இந்நிறுவன சேவையைப் பயன்படுத்தி சுற்றுலா மேற்கொள்கின்றனர்

‘தாமஸ் குக்’ இந்தியாவுக்கு பாதிப்பில்லை

2012-ம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் ‘ஃபேர்பாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்திடம் 77 சதவீத பங்குகள் உள்ளன. இதனால் இந்திய செயல்பாடுகள் பாதிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தாய் நிறுவனமான தாமஸ் குக், இந்திய செயல்பாட்டுக்கான பங்குகள் முழுவதையும் ஃபேர்பாக்ஸ் நிறு வனத்துக்கு மாற்றியுள்ளது. இதனால் தாய் நிறுவனத்துக்கும், இந்தியாவில் உள்ள நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இங்கிலாந்தில் உள்ள தாமஸ் குக் திவால் ஆனாலும், இந்தியப் பிரிவு செயல்படும் என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தாமஸ் குக் இந்தியா நிறுவனத்துக்கு வங்கியில் ரூ.1,389 கோடி இருப்பு உள்ளது. நிறுவனம் ரூ.67 கோடிக்கான கடன் பத்திரங்களை முதிர்வு காலத்துக்கு முன்பே அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்