இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு 500 பில்லியன் டாலராக உயர வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை

இந்தியா மற்றும் அமெரிக்காவுக் கிடையேயான வர்த்தக உறவை மேலும் விரிவாக்கம் செய்வதே இந்தியாவின் தற்போதைய நோக் கம் என்று மத்திய வர்த்தக அமைச் சர் பியூஷ் கோயல் தெரிவித் துள்ளார். மும்பையில் உள்ள இந்தோ அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸில் நேற்று பேசுகையில் இக்கருத்தை அவர் தெரிவித்தார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மதிப்பு 150 பில்லியன் டாலராக உள்ளது. அதை 500 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 21 முதல் 27 வரை மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பியூஷ் கோயல் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் உள் நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்து வருகிறார்.

இதனால் பிற நாட்டு இறக்கு மதிகளுக்கு வரி விகிதத்தை உயர்த்தி வருகிறார். அமெரிக்கர் களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக ஹெச் 1-பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள் ளார். இந்நிலையில் மோடியின் அமெரிக்க பயணம் வர்த்தக உறவில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பியூஷ் கோயல்,‘ இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதே தற்போதைய இலக்கு. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் சிறுசிறு பிரச் சினைகள் அனைத்தும் களையப் படும். கிட்டத்தட்ட 3.5 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், வெவ்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு குறிப்பாக தேயிலை, டீ, மசாலா போன்ற பொருட்கள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகிறது’ என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்