ரூ.7,300 கோடி மதிப்பிலான பங்குகள்: விப்ரோவிடம் அஸிம் பிரேம்ஜி குழுமம் விற்பனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

அஸிம் பிரேம்ஜி மற்றும் குழும நிறுவனங்கள், விப்ரோ நிறுவனத்தின் ரூ.7,300 கோடி மதிப்பிலான 22.46 கோடி பங்குகளை அந்நிறுவனத்திடமே விற்றுள்ளனர். கடந்த மாதம் விப்ரோ நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்து இருந்தது. அப்போது இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனங்கள் அதன் பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்குவது வழக்கம். சந்தையில் இருக்கும் மதிப்பை விட அதிக விலை நிர்ணயித்து அந்தப் பங்குகளை வாங்கும். இவ்வாறு விப்ரோ நிறுவனம் கடந்த மாதம் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்து இருந்தது. அப்போது அஸிம் பிரேம்ஜி மற்றும் குழும நிறுவனங்கள் 22.46 கோடி பங்குகளை விப்ரோ நிறுவனத்திடம் விற்றுள்ளனர். எல்ஐசி நிறுவனமும் 1.34 கோடி பங்குகளை விப்ரோவிடம் விற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு பங்கின் விலை ரூ.325 என்று நிர்ணயிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.10,500 கோடி அளித்து 32.3 கோடி பங்குகளை விப்ரோ நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இதில் அஸிம் பிரேம்ஜி மற்றும் குழும நிறுவனங்களிடமிருந்து மட்டும் 22.46 கோடி பங்குகள் திரும்ப வாங்கப்பட்டுள்ளன. அஸிம் பிரேம்ஜியிடமிருந்து 1.22 கோடி பங்குகளும், அஸிம் பிரேம்ஜி டிரஸ்டிடமிருந்து 4.05 கோடி பங்குகளும் வாங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அதன் நிறுவனத் தலைவர்கள் வசம் 74.05 சதவீத பங்குகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்