சிஜி பவர் நிறுவனத்தில் நிதி மோசடி: நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

சிஜி பவர் நிறுவனத்தில், அதன் அதிகாரிகளே நிதி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 சதவீதம் சரிந்துள்ளது.

சிஜி பவர் நிறுவனம் மின்சாரம் தொடர்பான பாகங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கவுதம் தாப்பர் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அந்நிறுவனத்தின் அதிகாரிகளே முறையான அனுமதி ஏதுமின்றி பணபரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

3 வருடங்களாக மோசடி

இந்த மோசடி கடந்த மூன்று வருடங்களாக நடந்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய அதி
காரிகளின் தலைமையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.இது குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் நேற்றைய முன்தினத்தில் இருந்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. யெஸ் வங்கி இந்த நிறுவனத்தில் 12.79 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த மோசடி வெளிவந்துள்ள நிலையில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பும் கடுமையாக சரிந்துள்ளது.

இந்த மோசடியின் காரணமாக கடந்த 2017 மற்றும் 2018- ம் ஆண்டுகளின் நிதி நிலை அறிவிப்பின்போது நிறுவனத்தின் நிதி அளவு தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் கடன் அளவு மொத்தமாக ரூ.3,600 கோடி அளவில் குறைவாக காட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் பிற நிறுவனங்களுக்கு அளித்
துள்ள கடன்களின் அளவுகளும் அந்த இரண்டு நிதி ஆண்டுகளில் மொத்தமாக ரூ.7,600 கோடி அளவில் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் அனைத்து நிதிக் குளறுபடிகளும் சரிசெய்யப்
படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 19.93 சதவீதம் சரிந்து ரூ.11.85 க்கு வர்த்தகமானது. அதேபோல், நேற்றைய வர்த்தகம் முடிவில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 8.64 சதவீதம் குறைந்து ரூ.65.05-க்கு வர்த்தகமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

தமிழகம்

54 secs ago

ஓடிடி களம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்