ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிதி மோசடி வழக்கு; அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல்: ரூ.570 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத் தின் மீதான நிதி மோசடி வழக்கில், அமலாக்கத் துறை கடந்த வெள்ளிக் கிழமை அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், அந் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு சொந்தமான ரூ.570 கோடி மதிப்பி லான சொத்துகளையும் அமலாக் கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனமான ஐஎல் அண்ட் எஃப்எஸ்-ன் உயர் நிலை அதிகாரிகள் நிதி மோசடியில் ஈடுபட்ட நிலையில், அந்நிறுவனம் கடந்த 2017 ஆண்டு முதல் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க ஆரம் பித்தது. அந்நிறுவனத்தில் அதிக அளவில் நிதி மோசடியில் ஈடு பட்டு இருப்பது வெளியே தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்நிறு வனம் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வந்தது. இந்நிலையில், அமலாக்கத் துறை கடந்த வெள்ளி அன்று அவ்வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகையை தாக் கல் செய்துள்ளது. அத்துடன் அந் நிறுவனத்தின் நிதிப் பிரிவின் இயக் குநர்கள் தொடர்பான ரூ.570 கோடி மதிப்பிலான சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத் தின் நிதிப் பிரிவு இயக்குநர்களான ரவி பார்த்தசாரதி, ரமேஷ் பாவா, ஹரி சங்கரம், அருண் சஹா, ராம சந்த் கருணாகரன் ஆகியோர்கள் தொடர்புடைய சொத்துகளை அம லாக்கத் துறை பறிமுதல் செய்துள் ளது. மேலும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தில் மறைமுக தொடர் பில் இருந்து மோசடியில் ஈடுபட்ட சிவசங்கரன் மற்றும் அவரது குடும் பத்திரனர்கள் தொடர்புடைய சொத் துகளும் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகள், அசையா சொத்துகள் என மொத்தமாக ரூ.570 மதிப்பிலான அவர்களது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் முறை கேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு ரூ.5,000 கோடி அளவில் நிதி மோசடி செய்தன. அந்நிறு வனத்தின் உயர் அதிகாரிகள் இம்மோசடியில் மிக முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. மோசடி வெளியே கசியாமல் இருப் பதற்காக தணிக்கை நிறுவனங் களுக்கு லஞ்சம் அளித்துள்ளனர். இந்நிலையில் அதன் குழும நிறுவனங்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு விசாரணையில், இந்நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாக அதிகாரிகள் தங்கள் சுய லாபத்துக்காக நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 19 அன்று இந்நிறுவனத்தின் நிதிப் பிரிவின் இயக்குநர்களான அருண் சஹா, ராமசந்த் கருணா கரன் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்நிலை யில், ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமத் தில் ஒன்றான பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை நிறுவனத்தின் செயலர் சாஹெலி பானர்ஜி நேற்று பதவி விலகியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்