வியட்நாம், ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் எதிரொலி: இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்தியா மேற் கொண்டுவரும் கடல் உணவு ஏற்றுமதியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வியட்நாமுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து கடல் உணவு ஏற்றுமதில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடல் உணவு வகைகளை வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் வியட்நாம் கையெழுத்திட்டது. இதனால் வியட்நாம் அரசு கடல் உணவு வகைகள் உட்பட சில பொருட்களை வரி ஏதும் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இதன் விளைவாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து மகாராஸ்டிரா மாநிலத் தின் இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர் கள் சங்கத்தின் தலைவர் இராணி கூறியதா வது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதில் வியட் நாமுக்கு போட்டியாக இந்தியா இருந்து வந் தது. தற்போது வியட்நாம் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதனால் இந்தியாவை விட 6 சதவீதம் அதிக அளவில் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும். அவர்கள் ஏற்றுமதி செய்வதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் இந்தியா 6 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கும் வரியில்லா வர்த்தக உறவு இந்தியாவுக்கு ஆபத்தானது. ஏனென்றால் கடல் உணவுகளை இந்தியா வரியில்லாமல் ஏற்றுமதி செய்வ தற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் தயாரிப்புகளை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைக்கப் படுகிறது. அது இந்திய சந்தையை பாதிக்கும் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் அதிக சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்நிலையில் கடல் உணவு ஏற்றுமதியில், பிற நாடுகளைவிட இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் அதிக எண்ணிக்கையில் சோதனை செய்கின்றது.

இதுகுறித்து இராணி கூறியபோது, ‘‘பிற நாடுகளின் கடல் உணவுகளை ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீத அளவில் சோதனை செய் கிறது என்றால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளை 50 சதவீத அளவில் சோதனை செய்கிறது. அதில் ஏதேனும் குறைபாடு தென்படும் பட்சத்தில், அந்த ஏற்றுமதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதன்விளைவாக, கடல் உணவு ஏற்றுமதியில் முன்னிலை வகிக் கும் 10 இந்திய நிறுவனங்களில் 4 நிறு வனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்று மதி செய்வதை நிறுத்தி விட்டன’’ என்று தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் கடல் உணவுகளை இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்