தங்கம் இறக்குமதி 35% அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) 35.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் இறக்குமதியான தங்கத்தின் மதிப்பு ரூ. 80 ஆயிரம் கோடியாகும். நிதிப் பற்றாக்குறையில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 59 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே தங்கம் இறக்குமதியாகியிருந்தது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) தங்கம் இறக்குமதியால் வெளியேறிய டாலரின் மதிப்பு 5,720 கோடி டாலராகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.8 சதவீதமாகும். தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தங்கம் இறக்குமதி இரட்டை இலக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்