இண்டிகோ நிறுவனத்தின் விதிகளை மாற்ற அனுமதிக்க முடியாது: இணை நிறுவனர் ராகேஷ் கங்வால் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இண்டிகோ விமான சேவை நிறுவ னத்தின், இயக்குநர்கள் குழுவின் அமைப்பை மாற்றியமைப்பதற் கான புதிய விதிமுறைகளுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவ னர் ராகேஷ் கங்வால் தெரிவித் துள்ளார்.

அந்நிறுவனத்தின் இயக்குநர் களுக்கு அவர் அனுப்பிய கடிதத் தில் தன்னுடைய இந்த நிலைப் பாட்டைக் குறிப்பிட்டுள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் நிறு வனர்களான ராகுல் பாட்டியா மற் றும் ராகேஷ் கங்வால் ஆகிய இரு வருக்கிடையே சமீபகாலமாக மோதல் நடைபெற்றுவருகிறது. ராகுல் பாட்டியா தன்னுடைய அதி காரத்தை அதிகரிப்பதற்கான வழி களில் இறங்கியுள்ளார் என்று ராகேஷ் கங்வால் குற்றம் சாட்டி யிருந்தார். அதன் தொடர்ச்சியாக இயக்குநர்கள் குழுவின் அமைப்பை மாற்றுவதற்கான விதிமுறைகளுக்கு தன்னால் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தப் புதிய மாற் றம் குறித்து சிந்திப்பதற்குமுன், நிறுவனத்தின் நிர்வாகக் குறைபாடு கள் சரி செய்யப்பட வேண்டும். அதேபோல் நிறுவனத்தின் பரிவர்த் தனை நடைமுறையில் புதிய கொள் கைகள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் இயக் குநர்கள் குழு அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது ராகுல் பாட்டி யாவின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்வதாகவே அமையும் என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித் துள்ளார்.

ஆகஸ்ட் 27 அன்று இண்டிகோ நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டம் நடைபெற இருக்கிற நிலையில் ராகேஷ் கங்வால் தனது இந்த நிலைப்பாட்டை இயக்குநர் குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 20, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அமைப்பில் மாற்றம் கொண்டுவருதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி, இயக்குனர்களின் எண்ணிக் கையை 10 ஆக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ராகேஷ் கங்வால் உட்பட 6 இயக்குநர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இயக்கு நர்கள் குழுவின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படும்போது, அது ராகுல் பாட்டியாவுக்கு கூடு தல் அதிகாரத்தை வழங்கக் கூடிய தாகவே அமையும் என்று ராகேஷ் கங்வால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்