தொலை தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடம்

By செய்திப்பிரிவு

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஜூன் முடிந்த காலாண் டில் மற்ற தொலை தொடர்பு நிறு வனங்களை பின்னுக்கு தள்ளி, வியாபார அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ, கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் வாடிக்கையாளர்கள் பயன்பாட் டுக்கு வந்தது. அச்சமயத்தில் ஏர் டெல், வோடபோன் ஆகிய நிறு வனங்கள் தொலை தொடர்பு மற் றும் இணைய சேவையில் முன் னணியில் இருந்து வந்தன. இந்த மூன்றாண்டு காலகட்டத்தில் இந் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு சந்தையில் முதல் இடம் பிடித்துள்ளது. ஜூன் முடிந்த காலாண்டில் ஜியோ நிறுவனம் 33.1 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

4 ஜி இணைய சேவையில் ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் இருந்து வந்தது. இந்நிலையில், ஜியோ அறிமுகத்துக்கு பிறகு ஏர் டெலின் சந்தை கடுமையான அள வில் சரிந்துள்ளது. ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இணைய சேவைக்கு அதிக அளவு கட்ட ணம் வசூலித்து வந்தன. அதற்கு மாற்றாக குறைந்த விலையில் இணைய சேவையை ஜியோ அறி முகப்படுத்தியது. இந்நிலையில் இந்த மூன்றாண்டு காலத்தில் ஜியோவுக்கான வாடிக்கையாளர் கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதனால் முடிந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, மற்றொரு முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம், ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் கூட் டமைப்பு வைத்தது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 42 கோடியை தொட்டது. இருந் தும், ஜியோக்கான சந்தையை அவற்றால் கைப்பற்ற முடிய வில்லை.

தற்போது முடிந்த ஜூன் காலாண் டில் ஜியோ நிறுவனம் ரூ.891 கோடியை லாபமாக ஈட்டியுள்ள நிலையில் வோடபோன் - ஐடியா நிறுவனம் ரூ.4,874 கோடி நஷ் டத்தை சந்தித்துள்ளது. இந்நிலை யில், வோடபோன் - ஐடியா நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட் டுள்ளது.

இது குறித்து முகேஷ் அம்பானி கூறியபோது, ‘நாங்கள், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தர மான தொலைதொடர்பு மற்றும் இணைய சேவையை குறைந்த விலையில் வழங்குவதை நோக்க மாக கொண்டுள்ளோம். எங்கள் சேவையை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

12 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்