நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7%: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஆசியன் வளர்ச்சி வங்கி (ஏடிபி), நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்தியா வின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீத மாக இருக்கும் என்று முன்பு கணிக் கப்பட்டிருந்த நிலையில், அது தற் போது 7 சதவீதமாக குறைந் துள்ளது.

2018-19 நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 5.8 சதவீதமாக குறைந்தது. அதைத் தொடர்ந்து. 2018-19 நிதியாண்டு முழுமைக் குமாக இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக பதிவானது.

இதன் விளைவால் 2019-20 நிதியாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியாது. எனவே, இந்நிதியாண்டில் இந்தியா வின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக் கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்தியா 7.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று ஏடிபி கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக் கும் என்று கூறப்பட்டது. அச்சமயத் தில், 2019-20 நிதியாண்டில் இந் தியா 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அப்போது கணிக்கப் பட்ட 7.2 சதவீத வளர்ச்சி தற் போது 7 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்