மாருது சுசூகி, மஹிந்த்ரா ஹாலிடே, பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி - காலாண்டு முடிவுகள்

By செய்திப்பிரிவு

மாருதி சுசூகி நிகரலாபம் ரூ.1,193 கோடி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் நிகர லாபம் 56% உயர்ந்து ரூ.1,193 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 762 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.

இந்த காலாண்டில் நிகர விற்பனை 18 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் 11,073 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ. 13,078 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2.99 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன. இப்போது 3.41 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன.

இந்த காலாண்டில் ஏற்றுமதி 21 சதவீதம் உயர்ந்திருக்கிறது. செலவு குறைப்பு நடவடிக்கைகள், அதிக எண்ணிக்கையில் விற்பனை, விற்பனை மேம்பாட்டுக்கான செலவு குறைந்தது, சாதகமான அந்நிய செலாவணி சூழ்நிலை ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.

மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் லாபம் உயர்வு

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் இந்தியா நிறுவனம் (எம்ஹெச்ஆர்ஐஎல்) நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 25 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய ஆண்டு நிறுவனத்தின் லாபம் ரூ. 20 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 231 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் வருமானம் ரூ. 186 கோடியாக இருந்தது. மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 46 ரிசார்ட்கள் உள்ளன. மொத்தம் 1.86 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பி.என்.பி நிகர லாபம் 49% சரிவு

வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருப்பதால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகரலாபம் 49 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே நிதி ஆண்டில் 1,405 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 721 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.

மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 12,825 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 13,432 கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்த வாராக் கடன் கடந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் 5.48 சதவீதமாக இருந்தது. இப்போது 6.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

வாராக்கடனுக்காக 1,811 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 928 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் 4.96 சதவீதம் உயர்ந்து 141.85 ரூபாயில் முடிவடைந்தது.

பேங்க் ஆப் இந்தியா நிகரலாபம் 84% சரிவு

பேங்க் ஆப் இந்தியாவின் நிகரலாபம் 84% சரிந்து 129 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 805 கோடி ரூபாயாக இருந்தது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருப்பதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 893 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டது. இப்போது 1,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கியின் மொத்த வாராக்கடன் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது இரு மடங்கு அதிகரித்துள்ளது.

மொத்த வருமானம் மிகச்சிறிய அளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 11,328 கோடி ரூபாயாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 11,659 கோடி ரூபாயாக இருக்கிறது.

ஹெச்டிஎப்சி நிகரலாபம் ரூ.2,204 கோடி

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎப்சியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 2,204 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,872 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.

கடந்த வருடம் ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து 269 கோடி ரூபாய் டிவிடெண்ட் ஜூன் காலாண்டில் வந்திருக்கிறது. ஆனால் இந்த வருட டிவிடெண்ட் ஜூலை மாதம் (314 கோடி ரூபாய்) வந்திருக்கிறது.

கடந்த வருடம் ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் 10,056 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வருடம் சிறிதளவு உயர்ந்து 11,440 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்த காலாண்டில் ஹெச்டிஎச்ப்டி கேபிடல் அட்வைசர்ஸ் என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக ஹெச்டிஎப்சி தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

க்ரைம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்