கேரள வங்கிகளில் என்ஆர்ஐ டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

By ஐஏஎன்எஸ்

கேரள வங்கிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) டெபாசிட் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த தகவலை மாநில அளவிலான வங்கியாளர்கள் கமிட்டி (எஸ்எல்பிசி) நேற்று அறிவித்தது.

மார்ச் 2013-ம் நிதி ஆண்டு முடிவில் கேரள வங்கிகளில் என்ஆர்ஐ டெபாசிட் ரூ.66,190 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2014 முடிவில் ரூ. 93,883 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் 2015 முடிவில் ரூ.1,09,603 கோடியாக என்ஆர்ஐ டெபாசிட் இருக்கிறது.

என்ஆர்ஐ டெபாசிட்களை பெறுவதில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வங்கியின் என்ஆர்ஐ டெபாசிட் ரூ.26,613 கோடியாகும்.

இதற்கடுத்து பெடரல் வங்கி ரூ.23,214 கோடி அளவுக்கு என்ஆர்ஐ டெபாசிட்களை பெற் றிருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.14,456 கோடி அளவுக்கு என்ஆர்ஐ டெபாசிட் உள்ளது.

கேரளாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் உள்ள மொத்த என்ஆர்ஐ டெபாசிட் ரூ.23,203 கோடி மட்டுமே. இந்த தொகை ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பெடரல் வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகையை விட குறைவு.

கேரளாவில் இருந்து வெளி நாடு செல்பவர்களில் 90 சதவீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். கேரளாவில் மொத்தம் 5,984 வங்கி கிளைகளும், 8,477 ஏடிஎம் களும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்