நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது. இந்த வட்டி குறைப்பு மூலம் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.70 சதவீதமாக உள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கடந்த மூன்று மாதத்தில் ஹெச்டிஎப்சி இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு செய்கிறது. கடந்த ஏப்ரலில் 0.15 சதவீதம் அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்தது.
அதேபோல எஸ்பிஐ வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர் (எஸ்பிபிஜே) அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்து 9.95 சதவீதமாக்கி இருக்கிறது.
இந்த வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்று வங்கி தெரிவித்திருக்கிறது. அடிப் படை வட்டி விகிதம் குறைக்கப் பட்டதால் அனைத்து கடன் களுக்கான இஎம்ஐ குறையும்.
எஸ்பிஐ, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகிய வங்கிகள் ஏற்கெனவே வட்டி குறைப்பை செய்துவிட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago