பங்குச்சந்தை ஏற்றத்தில் தொடங்க வாய்ப்பு

By பிடிஐ

தொழில் உற்பத்தி குறியீடு உயர்ந்தது மற்றும் நிலையான பணவீக்கம் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை இன்று ஏற்றத் துடன் தொடங்கும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம் அந்நிய முதலீட்டாளர்களின் மனநிலை, பருவமழை நிலவரம், இந்த வாரம் நடக்க இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கலந்தாய்வு கூட்டம் ஆகிய காரணிகளும் சந்தையின் போக்கினை தீர்மா னிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கியின் கலந்தாய்வு கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு செய்வது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

கடந்த மூன்று வாரங்களில் சென்செக்ஸ் 1,532 புள்ளிகள் அல்லது 5.48% சரிந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 343 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் சரிந்தது.

பங்குச்சந்தை சரிந்ததால் கடந்த வாரத்தில் முதல் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.54,189 கோடி சரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

ஓடிடி களம்

4 mins ago

விளையாட்டு

19 mins ago

சினிமா

21 mins ago

உலகம்

35 mins ago

விளையாட்டு

42 mins ago

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்