ரூபாய் மதிப்பு சரிவுக்கு மலேசியா, சீனாவில் செய்த முதலீடுகளே காரணம்

By பிடிஐ

சமீப நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்ததற்கு சீனா மற்றும் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே காரணம் என்று மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விரு நாடுகளிலும் சர்வதேச முதலீடுகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடந்த வாரத்தில் கடுமையாக சரிந்தது. ஒரு டாலருக்கு 64.23 என்ற அளவுக்கு தர வேண்டிய நிலை உருவானது. இது கடந்த 20 மாதங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை வங்கி யாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை விற்பனை செய்ததால் ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது. ஒரு டாலருக்கு ரூ. 63.94 தர வேண்டிய அளவுக்கு முன்னேறியது.

அந்நிய நிறுவனங்கள் மேற்கொள் ளும் முதலீடுகளை மலேசியா மற்றும் சீனாவில் செய்தன. இதனால் இந்தியாவுக்கு வர வேண்டிய டாலர் அளவு குறைந்தது. இது ரூபாய் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்று நிதியமைச்சக அதிகாரி குறிப்பிட் டார்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு அந்நிய நேரடி முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டமும் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வர காரணமானது.

இத்துடன் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சட்ட ரீதியான சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டார்.

இவ்விரு மசோதாக்களும் நிறைவேறும் பட்சத்தில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்