ஜிஎஸ்டி மூலம் இந்தியா உலகளவில் பெரிய வர்த்தகச் சந்தையாக வளரும்: மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

By பிடிஐ

ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத் துவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும், இதன் மூலம் இந்தியா உலகின் பெரிய வர்த்தக மையமாக வளரும் என்று குறிப்பிட்டுள்ளார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

அரசு கொண்டுவந்துள்ள சிறந்த முயற்சி என்றும், இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தையாக வளர்வதற்கான அரசின் பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். மேலும் இதற்கு இதர அரசியல் கட்சிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவாவதன் மூலம் உலக அளவிலான வர்த்தகப் போட்டிகளை சமாளிக்க முடியும். இதற்கு ஜிஎஸ்டி சட்டத் தை அமல்படுத்துவதுதான் சிறந்த வழி என்று குறிப்பிட்டார். நேற்று இந்திய வர்த்தக சம்மேளனங் களின் கூட்டமைப்பான பிக்கி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.

மக்களைவையில் கடந்த வாரம் இந்த சட்ட வடிவத்தை கொண்டுவந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களையில் இந்த சட்டத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மத்திய அரசு பின்வாங்கும் என்பதற்கே வாய்ப்பில்லை. தற்போது மாநிலங்களைவையில் அரசுக்கு ஆதரவாக குறைவான உறுப்பினர்களே உள்ளனர். இதனால் ஜிஎஸ்டி சட்டத்தை நிலைக்குழு ஆதரவுடன் கொண்டு வர யோசனை உள்ளது.

இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளு டனும் எற்கனவே கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதர அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் காங்கிரஸ் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்திய தொழில்துறை உலகளவிலான வாய்ப்புகள் மற்றும் பெரிய ஒப்பந்தங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நமது ஒழுங்கு முறைகளைக் கொண்டே நமது சந்தையை மாற்றுவதற்கு தயாராக இருக் கிறோம், நமது வழிமுறைகளில் உள்ள சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக சீனா தனது அமைப்பு முறைகளில் கொண்டுவந்த மாற்றங்களின் மூலம் சர்வதேச வர்த்தக மையத்தில் உறுப்பினரானது. அதன் பயன்களை அனுபவிக்கிறது. அதுபோல இந்தியாவும் உலகச் சந்தையில் இடம் பெற வேண்டும்.

உலக வர்த்தக மையத்தில் பயன்பெறும் உலகின் பெரிய நாடாக சீனா உள்ளது. மிகபெரிய ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளராகவும் சீனா உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடது சாரி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு அளிக்கும் என்று மத்திய அரசு நம்புவதாக தெரிவித்தார். நடப்பு கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

52 mins ago

கல்வி

49 mins ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்