சக்திவாய்ந்த 2,000 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ்: 56 இந்திய நிறுவனங்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

உலகின் சக்தி வாய்ந்த 2000 நிறுவனங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளி யிட்டது. 56 இந்திய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித் திருக்கின்றன. இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 579 நிறுவனங்கள் உள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் பெரும் ஆதிக்கம் செலுத் துகின்றன.

சீனாவை சேர்ந்த 232 நிறுவனங்களும், ஜப்பானில் இருந்து 218 நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித் திருக்கின்றன.

இங்கிலாந்தைச் சேர்ந்த 95 நிறுவனங்கள் உள்ளன. சென்ற வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இரண்டு இந்திய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. ரிலையன்ஸ் 142-வது இடம் பிடித்திருக்கிறது.

இதற்கடுத்து எஸ்பிஐ 152-வது இடத்தை பிடித் திருக்கிறது. ஓஎன்ஜிசி (183), டாடா மோட்டார்ஸ் (263), ஐசிஐசிஐ வங்கி (283), இந்தியன் ஆயில் (349), ஹெச்டிஎப்சி வங்கி (376), என்டிபிசி (431), டிசிஎஸ் (485), பார்தி ஏர்டெல் (506), ஆக்ஸிஸ் வங்கி (558) மற்றும் இன்போசிஸ் 672-வது இடத்தை பிடித்திருக்கின்றன.

61 நாடுகளை சேர்ந்த நிறுவ னங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

தமிழகம்

46 mins ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்