7.2 சதவீத காலாண்டு வளர்ச்சி: மூடி’ஸ் நிறுவனம் கணிப்பு

By பிடிஐ

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என்று மூடி’ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதம் சரிந்திருக்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருந்தது.

உற்பத்தி குறைவு மற்றும் சர்வதேச அளவிலான தேவை குறைந்தது ஆகிய காரணங்களால் வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் என்று மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட புதிய ஜிடிபி தகவல்கள் குழப்பமாக உள்ளது, இது நாட்டின் உண்மையான பொருளாதாரத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் மூடி’ஸ் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் 2011-12-ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஜிடிபி கணக்கிடப்பட்டது.

2011-12-ம் ஆண்டை அடிப் படையாக வைத்து கணக்கிடும் போது 2013-14-ம் ஆண்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக உள்ளது. 2014-15-ம் ஆண்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.

ஜிடிபி இன்று வெளியீடு

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துக்கான ஜிடிபி தகவல்கள் இன்று வெளியாக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தது, ஏற்றுமதி இரட்டை இலக்க சதவீதத்தில் வீழ்ச்சி அடைந்தது, சர்வதேச அளவில் தேவை குறைந்தது ஆகியவை காரணமாக ஜிடிபி குறையும் என்று மூடி’ஸ் தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்