காலாண்டு முடிவுகள்: சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 417 கோடி

By பிடிஐ

சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 417 கோடி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 417 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 409 கோடியாக இருந்தது.

நான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 6,599 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 5,357 கோடியாக இருந்தது. ஒரு பங்குக்கு ரூ. 4.70 ஈவுத் தொகை (டிவிடெண்ட்) அளிக்க இயக்குநர் குழுமம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2014-15) வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் சரிந்து ரூ. 1,522 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,711 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 23,724 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 19,945 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இது 2.62 சதவீதமாக இருந்தது. நிகர வாராக் கடன் 1.56 சதவீதத்திலிருந்து 1.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பி அண்ட் ஜி லாபம் 7.59% உயர்வு

பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 86.89 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் லாபம் 7.59 சதவீதம் உயர்ந்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 80.76 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ. 554.84 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ. 500.35 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தில் பொறுப்புகள் இல்லாத செயல் இயக்குநராக பிரமோத் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய தகவலில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கில்லெட் லாபம் ரூ. 30 கோடி

அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான கில்லெட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ. 30.76 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன லாபம் ரூ. 8.48 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர விற்பனை வருமானம் 8.45 சதவீதம் உயர்ந்து ரூ. 493.68 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை வருமானம் ரூ. 455.18 கோடியாக இருந்தது.

இந்நிறுவனம் ஜூலை முதல் ஜூன் வரையான காலத்தை நிதி ஆண்டாக கடைப்பிடிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்