2,000 ஒரு நபர் நிறுவனங்கள் இந்தியாவில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கடந்த 11 மாதங்களில் சுமார் 2,000 ஒருநபர் நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் ஒருநபர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. தனிநபர் களின் ஆர்வம் காரணமாக 2,000 நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கிறது.

2014 ஏப்ரல் முதல் 2015 பிப்ரவரி இடையேயான 11 மாத காலத்தில் இந்த நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு மாதமும் 177 நிறுவனங் கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பான்மையான நிறுவ னங்கள் சேவை பிரிவு நிறுவனங் களாகும் என்று கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் தெரி வித்திருக்கிறது.

கம்பெனிச் சட்டம் (2013) 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல் படுத்தப்பட்டது. 1,953 நிறுவனங்கள் மூலம் ரூ.44.83 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 1,063 நிறுவனங்கள் சேவை பிரிவில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதிகபட்சமாக 46 நிறுவனங்கள் டெல்லியில் தொடங்கப்பட்டிருக் கின்றன. இதற்கடுத்து மகாராஷ்டி ராவில் 42 நிறுவனங்களும், உத்தரப் பிரதேசத்தில் 33 நிறுவனங்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள் ளிட்ட பல நாடுகளில் ஒரு நபர் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன.

இதற்கிடையே பிப்ரவரி 28-ம் தேதி வரையில் 3,309 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல் பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்