வருங்காலத்தில் வங்கித் துறையில் பெரிய மாற்றங்கள் நிகழும்: பட்டமளிப்பு விழாவில் ரகுராம் ராஜன் பேச்சு

By செய்திப்பிரிவு

வங்கித் துறையில் புதிய நிறுவனங் கள் நுழைய இருப்பதால் வருங் காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று ரிசர்வ் வங்கியின் கவர் னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

பேமெண்ட் வங்கி, சிறிய வங்கி உள்ளிட்டவை வர இருப்பதால் வருங்காலத்தில் இந்த துறையில் மாற்றம் நிகழும் என்று புனேவில் உள்ள தேசிய வங்கி நிர்வாக கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழாவில் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன் மேலும் கூறியதாவது.

புதிய வங்கிகளின் வருகை யினால் தற்போது இருக்கும் நிறுவனங்களிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். பெரும்பாலான வங்கிகள் சமூகத் துறைகளில் செயல்படும். அங்கு அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கைகளில் இறங்கும்.

மேலும் வங்கிகளுக்கு பல விதமான புதிய வாய்ப்புகள் உரு வாகும். உதாரணத்துக்கு டெரிவேட் டிவ் சந்தை மேலும் வளர்ச்சி அடை யும். அதிகம் தொழில்நுட்பம் பயன் படுத்தப்படும். இது கடந்த காலத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும். இருந்தாலும் தொழில்நுட்பம், டெரிவேட்டிவ் தவிர வேறு பல வாய்ப்புகளும் உள்ளன என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

பேமெண்ட் வங்கி தொடங்கு வதற்கு கடந்த டிசம்பரில் 40 விண் ணப்பங்கள் வந்தன. அதேபோல சிறிய வங்கி தொடங்கவும் 31 விண் ணப்பங்கள் வந்தன. சமீபத்தில் இந்திய தபால் துறையும் பேமெண்ட் வங்கி தொடங்க விண்ணப்பித்தது.

கடந்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி ஐடிஎப்சி மற்றும் பந்தன் ஆகிய நிதி நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டன. இதில் ஐடிஎப்சி வங்கி வரும் அக்டோபர் மாதம் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூனேவில் நடந்த இந்த பட்ட மளிப்பு விழாவில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியனும் கலந்துகொண்டார். அவர் கூறிய தாவது.

இந்தியா கச்சா எண்ணெய் அதிகளவு இறக்குமதி செய்யும் நாடு. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. இது நமக்கு சாதகமான சூழ்நிலை யாகும். சர்வதேச அளவில் வளர் வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இருக்கிறது.

தற்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவின் வளர்ச்சி விகி தத்தை விட அதிகமாக இருக் கிறது. இந்தியா தனக்கு இருக்கும் சாதகமான விஷயங்கள் மூலம் வளராமல் சாதகமில்லாத விஷயங் களை வைத்து வளர முயற்சிக்கிறது. வேலைக்கு தகுந்த திறனுடைய நபர்கள் இங்கு இல்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்