ஏற்றுமதியில் சேவை துறையின் பங்கு உயரும்: வர்த்தக அமைச்சகம் கருத்து

By பிடிஐ

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா வின் ஏற்றுமதியில் சேவைத் துறை யின் பங்களிப்பு கணிசமாக உயரும் என்று வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய வர்த்தக கொள்கை மூலம் சேவை துறை வளரும். ஏற்றுமதியில் இந்த துறையின் பங்களிப்பு கணிசமாக உயரும் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 90,000 கோடி ஏற்றுமதி இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இரண்டுக்கும் தனிப்பட்ட இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. சரக்கு மற்றும் சேவை துறை ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் என்று அவர் கூறினார்.

உலகளவில் சேவைத் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தவிர இந்தியாவின் ஜிடிபியில் சேவைத் துறையின் பங்கு 58 சதவீதமாக இருக்கிறது. 28 சதவீத வேலை வாய்ப்பை சேவைத் துறை அளிக்கிறது. மொத்த ஏற்றுமதியில் சேவைத் துறையின் பங்கு 35 சதவீதமாகவும் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்