வால்மார்ட் தலைமை நிதி அதிகாரி அஸ்வின் மிட்டல்

By செய்திப்பிரிவு

வால்மார்ட் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியாக (சிஎப்ஓ) அஸ்வின் மிட்டல் நியமிக்கப் பட்டிருக்கிறார். இதுதவிர ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவராக ஜேவியர் ரோஜோ நியமிக்கப்பட் டிருக்கிறார்.

தற்போதைய தலைமை நிதி அதிகாரியான ஜில் ஆண்டர்சன் வால்மார்ட் அமெரிக்கா நிறுவனத் துக்குச் செல்ல இருப்பதால் இந்த மாற்றம் நடைபெற்றதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நியமனங்கள் மூலம் வால்மார்ட் நிறுவனம் இந்திய தொழிலில் உறுதியாக இருப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ் ஐயர் தெரிவித்தார்.

அஸ்வின் மிட்டல் 2007-ம் ஆண்டு வால்மார்ட் நிறுவனத் தில் இணைந்தார். நிதி திட்டமிடல் பிரிவின் தலைவ ராக பொறுப்பேற்றார். அதன் பிறகு பல முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தார். துணை தலைமை நிதி அதிகாரியாகவும் இருந்தார்.

சி.ஏ. முடித்தவர். பன்னாட்டு நிறுவனங்களில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றவர்.

ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜேவியர் வால்மார்ட் அமெரிக்கா வின் ரியல் எஸ்டேட் பிரிவின் இயக்குநராக இருந்தவர். சிகாகோ வில் இருக்கும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர். மெக்டொனால்ட் நிறு வனதில் 10 வருடமும், வால்மார்ட் நிறுவனத்தில் 15 வருடங்களும் பணியாற்றியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்