கச்சா எண்ணெய் விலை உயர்வு: பீப்பாய் 62 டாலராக விற்பனை

By செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 62 டாலராக விற்பனை யானது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை யாகும். மத்திய கிழக்கு நாடு களின் திடீர் அறிவிப்பு மற்றும் அமெரிக்காவில் தொடரும் பொரு ளாதார தேக்க நிலை ஆகியன விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

லிபியாவை இலக்காகக் கொண்டு எகிப்து திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இது கச்சா எண்ணெய் உற்பத்தியை பெரு மளவு பாதித்தது. இதனிடையே குர்திஷ் இடைக்கால அரசு தங்களுக்கு உரிய பங்கை பட் ஜெட்டில் ஒதுக்காவிட்டால் எண் ணெய் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளதும் உயர்வுக்கு காரணங்களாகும்.

சமீபகாலமாக சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தி யைக் குறைத்தது. இதனிடையே லிபியா தனது உச்சபட்ச உற்பத்தி இலக்கு அளவைத் தொட்டுள்ளது. இதேபோல யேமனும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்து வருகிறது. ராணுவ குறுக்கீடு இருந்தபோதிலும் யேமன் போதுமான அளவு உற்பத்தி செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிற்பாதியில் எண்ணெய் விலை பெருமளவு குறைந்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தி அளவைக் குறைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. அமெகித்தா லின் ஷேஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய்க்கு நிகராக போட்டியிடுவதற்காக அவை உற்பத்தியைக் குறைக்கவில்லை. இதனால் விலை கடுமையாகக் குறைந்தது.

ஜனவரி 13-ம் தேதி கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 45 டாலராக இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைந்த விலை இதுவாகும். கடந்த ஜூன் மாதம் ஒரு பீப்பாய் விலை 115 டாலராக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்