‘பணவீக்கம் இல்லாத 8 சதவீத வளர்ச்சி தேவை’

By பிடிஐ

ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்தகைய வளர்ச்சியை எட்டுவதன் மூலம் தான் நாட்டிலுள்ள இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற 15-வது டெல்லி ஸ்திரமான மேம்பாட்டு மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

இந்தியாவைப் பொருத்த மட்டில் பணவீக்கம் இல்லாத 8 சதவீத வளர்ச்சி அவசியம். இத் தகைய வளர்ச்சியை அடைவதன் மூலம்தான் வேலைவாய்ப்பு பெருகும். ஆண்டுதோறும் புதிய வேலை வாய்ப்பு உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியானது, இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப நமது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் நமது வளர்ச்சி ஸ்திரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

வளர்ச்சியை எட்டும் அதேவேளையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பருவநிலை மாறுபாடு என்பது உலகை அச்சுறுத்தும் மிகவும் சவாலான பணி. இதை அனைத்து நாடுகளுமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதைச் சமாளிக்க வேண்டுமாயின் புதிய கண்டுபிடிப்புகள் இப்போது மிகவும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற் கான அடிப்படை ஆண்டில் மாற்றம் செய்ததால் 2013-14-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.9 சதவீதமாக உயர்ந்தது. இது முன்னர் 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல 2012-13-ம் நிதி ஆண்டில் 4.7 சதவீதமாக இருந்த வளர்ச்சி திருத்தப்பட்ட கணக்கீட்டின்படி 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்ந மாநாட்டில் பேசிய யெஸ் வங்கியின் தலைவர் மற்றும் தலைwமைச் செயல் அதிகாரி ராணா கபூர், விரைவிலேயே தங்கள் வங்கி பசுமை பத்திரங் களை வெளியிடப் போவதாகக் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

25 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

18 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்