தொழில் தொடங்குவதற்கு உதவும் இணையதளம்: அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தொழில் தொடங்கும் சூழ்நிலையை எளிதாக்குவதற்கான இணையதளத்தினை ( >www.ebiz.gov.in) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளத்தில் மத்திய அரசின் 11 சேவைகள் இதில் இருக்கின்றன. இந்த இணையதளத்தை பொதுபயன் பாட்டுக்காக மத்திய அரசு தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்த உறுதி எடுத்திருக்கிறது.

இதில் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம், அரசாங்க நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும், மேலும் செயல் திறனும் அதிகரிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும் இந்த இணையதளம் செயல்பட ஆரம்பித்து விட்ட தால், தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஓவ்வொரு துறையின் வாசலில் காத்திருக்க தேவையில்ைல என்றார். இந்த நடவடிக்கை மூலம் உலகம் நம்மை பார்க்கும் கண்ணோட்டம் மாறும், இந்திய தொழில்துறையில் முக்கியமான மைல்கல் என்றார்.

இந்த இணைய தளத்தின் மூலம் கம்பெனி விவகார அமைச்சகம், ரிசர்வ் வங்கி, வருங்கால வைப்பு நிதி, இந்திய தொழில் கொள்கை மேம்பாட்டு வாரியம், வரி ஆணையம் ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்த முடியும்.

தொழில் புரிவதற்கான சூழ்நிலையை மேம்படுத்தும் சவால் அரசுக்கு இருந்தது இந்த இணையதளம் மூலம் சூழலை எளிதாக்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் மேலும் பல சேவைகள் இணைக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இந்த இணையதளம் மூலம் எந்த துறையிலும், எந்த அளவிலும் தொடங்க முடியும்.

மேலும் தொழில்புரிவதற்கான சூழலை இன்னும் எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.

இந்த இணையதளத்தை 24 மணிநேரமும் பயன்படுத்த முடியும். தொழில் தொடங்க விண்ணப்பங்கள், கட்டணத்தை யும் இதில் செலுத்த முடியும். தவிர விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமையையும் தெரிந்துகொள்ள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

3 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்