தொழில்துறையினர் ஏமாற்றம்

By பிடிஐ

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்சம் 0.75 சதவீத மாவது வட்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் வட்டிக் குறைப்பு ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இருப் பினும் எதிர்வரும் பட்ஜெட் மற்றும் நிதி ஆண்டில் சலுகை கள் அளிக்கப்படலாம் என நம்பிக்கையுடன் காத்திருப்ப தாகத் தெரிவித்துள்ளனர்.

வரும் நிதி ஆண்டிலாவது 0.75 சதவீதம் வட்டிக் குறைப்பு அதாவது பட்ஜெட்டுக்குப் பிறகு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும், இதனால் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும் எனவும் தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்ட மைப்பு (ஃபிக்கி) கருத்து தெரிவித்துள்ளது. எஸ்எல்ஆர் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் வங்கிகளிடையே பணப் புழக்கம் அதிகரிக்க ஆர்பிஐ வழியேற்படுத்தியுள்ளது புலனா கிறது.

இதன் மூலம் உற்பத்தித் துறைக்கு அதிக அளவில் கடன் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் ஃபிக்கி தெரிவித்துள்ளது.

பஞ்சாப், டெல்லி, ஹரியாணா தொழில் வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கி அரை சதவீதம் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு தேவை அதிகரிக்க வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகியுள்ளது.

இத்தகைய நிலையில் வட்டி குறைக்கப்பட்டால் தொழில் வளம் பெருகுவதோடு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஏற்கெனவே மேற்கொண்ட வட்டிக் குறைப்பின் பலனை நிறுவனங்களுக்கு வங்கிகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அசோசேம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்