புதிய அவதாரத்தில் ஹூண்டாய் வெர்னா

By செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட் டையில் ஆலை அமைத்து கார்களைத் தயாரித்து வரும் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான வெர்னா ரகக் கார் இப்போது பல்வேறு புதிய சிறப்பம்சங்களோடு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெர்னா 4எஸ் என்ற பெயரில் இது நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த மாடல் கார் 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் கார் 66 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 லட்சம் வாடிக்கை யாளர்கள் இந்தக் காரைப் பயன் படுத்தியுள்ளனர்.

செடான் ரகக் கார்களின் விற்பனை வெற்றிடத்தை நிரப்பும் விதமாக வெர்னா 4 எஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரீமியம் தோற்றம், அழகிய வடிவமைப்பு, உலக தரத்திலான பாதுகாப்பு அம்சங் களைக் கொண்டதாக இது வெளிந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் சித்தாந்தத்தின்படி அதிக சக்தி, ஓட்டுவதில் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிமுக விழாவில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பி.எஸ். சியோ தெரிவித்துள்ளார்.

புதிய மாடல் கார் அதாவது மேம்படுத்தப்பட்ட வெர்னா 4எஸ் 66 நாடுகளில் அறிமுகப் படுத்தப்படுகிறது. அந்தந்த நாடு களின் சாலைகளின் அமைப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப இது உருவாக்கப் பட்டுள்ளது என்று சியோ கூறினார்.

அமெரிக்காவில் உள்ள பள்ளத் தாக்கு, ரஷியாவில் நிலவும் உறைபனி, மலைசூழ் சாலைகளைக் கொண்ட சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

அமெரிக்காவின் நெடுஞ்சாலை பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்ததற்காக இந்த கார் சான்று பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 7.70 லட்சம் முதல் ரூ. 12.20 லட்சம் வரையாகும்.

6 காற்று நிரப்பப்பட்ட, ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பாதிப்பை உணரும் கதவுகள், விபத்தின்போது கார் கதவு தாமாக திறப்பது, கேமரா டிஸ்பிளே, பின்புறம் நிறுத்தும்போது உதவும் சென்சார், மழை பெய்யும்போது தானாக ஆன் ஆகும் வைபர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 min ago

ஆன்மிகம்

9 mins ago

ஆன்மிகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்