விமான எரிபொருள் விலை 11.3% குறைப்பு: டீசல் விலையை விட குறைந்தது

By பிடிஐ

விமான எரிபொருள் விலை அதிரடி யாக 11.3 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. அதனால் இப்போது டீசல் விலையை விட விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளது. கடந்தமுறை விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டபோது பெட்ரோல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைந்தது.

தற்போதைய விலை குறைப் பில், டீசல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைந்திருக் கிறது.

எரிபொருட்களின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறையில் சந்தை விலைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. இந்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை யில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேசமயம் மானியம் இல்லாத சமையில் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 103.50 ரூபாய் குறைக்கப்பட்டு இப்போது 605 ரூபாயாக இருக்கிறது.

விமான எரிபொருள் விலை 11.3 சதவீதம் (ரூ.5,909.90) குறைக்கப் பட்டு ஆயிரம் லிட்டர் 46,513.02 ரூபாயாக இருக்கிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி 12.5 சதவீதம் விமான எரிபொருள் விலை குறைக் கப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.52.42 ஆக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 58.91 ரூபாயாக (டெல்லி விலை நிலவரம்) இருந்தது.

இப்போது மேலும் குறைந்திருப்பதால் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 45.51 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய டீசல் விலை 51.52 ரூபாயாக இருக்கிறது.

பொதுவாக விமான எரிபொரு ளின் விலை பெட்ரோல், டீசல் விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது குறைவாக இருப்பதன் காரணம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த் தப்பட்டிருப்பதுதான். நிதிப் பற்றாக்குறையை குறைக்க பெட்ரோ மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது.

விமான எரிபொருளின் உற்பத்தி வரி 8 சதவீதமாக இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விமான எரிபொருள் விலை 7 முறை குறைக்கப்பட்டிருக்கிறது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டில் 40 சதவீதம் வரை எரிபொருளுக்கு செலவாகிறது.

எரிபொருள் கட்டணம் குறைக் கப்பட்டாலும், விமான நிறுவனங் களில் இருந்து உடனடியாக எந்தவிதமான கட்டண சலுகை களும் வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

சுற்றுச்சூழல்

21 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்