பங்குச் சந்தையில் கருப்புப் பணம்: ‘செபி’ தீவிர நடவடிக்கை

By பிடிஐ

பங்குச் சந்தையில் வரி ஏய்ப்பு செய்து கருப்புப் பண புழக்கத் துக்கு வழிவகுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) தீவிரமாக உள்ளது.

இதற்கென மூன்று விதிகளை செபி உருவாக்கியுள்ளது. இந்த மூன்று விதிகளில் ஏதேனும் ஒன்று பொருந்தினாலும் அந்நிறு வனங்களை பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட விடாமல் தடை செய்ய முடிவு செய்துள்ளது.

குறிப்பிட்ட முகவரியில் செயல் படாத நிறுவனங்கள், விருப்ப ஒதுக்கீடுகளை தவறாக பயன் படுத்துவது மற்றும் வலுவான நிதி ஆதாரம் இல்லாத நிறுவனங்கள் ஆகியன மூன்று காரணிகளாகும்.

சில குறிப்பிட்ட நிறுவனங் களின் பங்குகள் அதிக அளவில் உயர்ந்து காணப்படுகின்றன. ஆனால் செபி-யிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட முகவரி யில் அவை செயல்படுவதில்லை. இத்தகைய நிறுவனங்கள் முறை கேடாக பணம் திரட்டி வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டுள்ள தாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இத்தகைய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய் வது வரிச் சலுகை பெறுவதற்குத் தான். இதுபோன்று செயல்படும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தை தரகர்களை செபி தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான கோடிகளை பரிவர்த்தனை செய்த நிறுவனங்கள் செபி-யின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இதுபோன்ற முறைகேடான வழியில் இரு நிறுவனங்கள் ஆதாயமடைந்த தொகை ரூ. 500 கோடி இருக்கும் என செபி கணித் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

52 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

58 mins ago

மேலும்