தங்க நாணய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

By செய்திப்பிரிவு

தங்க நாணயங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இனி தங்கத்தை `கன்சைன்மென்ட்’ அடிப்படையில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

அதாவது வங்கிகள் சர்வதேச சந்தையில் இருந்து இனி கடனாக தங்க நாணயங்களை வாங்கு வதற்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது.

இப்படி கடனாக வாங்கபட்ட தங்கத்தை நகைக் கடைகளுக்கு கடனாகவும் வங்கிகள் விற்க முடியும்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்த முறையில்தான் வங்கிகள் தங்கத்தை வாங்கி வந்தார்கள். ஆனால் கடந்த வருடம் நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரித்ததன் காரண மாக இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இப்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துவிட்டதால் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி இருக்கிறது.

இதனால் இனி தங்கத்தின் புழக்கம் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு சரியான நடவடிக்கை என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக ஜூவல்லரி பங்குகளின் விலை உயர்ந்து முடிந்தது. பி.சி. ஜூவல்லர் பங்கு வர்த்தகத்தின் இடையே 6 சதவீதம் உயர்ந்தாலும் வர்த்தக முடிவில் 2.75% உயர்ந்து முடிந்தது.

டைட்டன் பங்கு 3 சதவீத அளவுக்கு உயர்ந்தாலும் முடிவில் 0.70% உயர்ந்து முடிந்தது. கீதாஞ்சலி ஜெம்ஸ் பங்கு 2.58% உயர்ந்து முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்